அ. லெ. நடராஜன் அவர்கள் எழுதிய "பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு" என்ற புத்தகத்தை அம்ருதா பதிப்பகம் மறு பதிப்பு செய்துள்ளது. அற்புத நூல்.
சிங்கப்பூர் நூலகங்களில் இரவலுக்கு கிடைக்கிறது.இந்தியாவில் உள்ளவர்கள் 230 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூலை, ரூ. 150 க்கு கீழ்கண்ட முகவரியில் வாங்கி கொள்ளலாம்.
அம்ருதா பதிப்பகம்,
எண்-5 , 5 வது தெரு, எஸ். எஸ். அவின்யு , சக்தி நகர்,
போரூர், சென்னை -106
மின்னஞ்சல்: amrudhapathippagam@yaoo.co.in
தொலைபேசி: 91-44-22522277
தமிழ் ஜினவாணி
Thursday, December 10, 2009
Sunday, November 1, 2009
Lord Mahavira -A study in Historical perspective
Dear readers,
I had an opportunity to go through a book in English named "Lord Mahavira (A study in Historical perspective)". I have uploaded the book in scribd. If you have interest, Please click on the title.
Title of the book: Lord Mahavira - A study in Historical perspective
Author: Dr. Boolchand
First published in 1948 and Republished in 1987
Published by: P.V.Research institute, Varanasi.

ஜைனம் - எளிய விளக்கம்
ஜைனம் - எளிய விளக்கம்
ஜைன இளைஞர் மன்றத்தின்( சென்னை), ஜைனம் பற்றி மிக எளிமையான குறிப்பு ஒன்றை ஜைன உலக இணையத்தில் கண்டேன். அதை pdf ல் scribd ல் வலைஏற்றிஉள்ளேன். கீழ்கண்ட தலைப்பை சொடுக்கவும்.
தலைப்பு: ஜைனம் அறிமுகம் - ஜைன இளைஞர் மன்றம், சென்னை.

Tuesday, October 20, 2009
தீபாவளி வாழ்த்தும், பகவான் மகாவீரரின் திருவுருவ தரிசனமும்
அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூர் ஜைன சங்கத்தில்-(ஸ்தானக்) (இரண்டாம் தளம்) மிக அழகிய மகாவீரரின் சிலையை ஸ்தாபிதம் செய்திருக்கிறார்கள். ஞாயிறு அன்று காலை பகவனை தரிசிக்கும் பேறையும், பூஜையை தரிசிக்கும் பேறையும் பெற்றோம். படங்கள் கீழே...

பகவானின் தரிசனம் காலை 7:30 முதல் 10:00 மணி வரை மட்டும் என அலுவலகத்தில் தெரிவித்தார்கள்.பூஜை செய்ய விரும்புபவர்கள், பூஜைக்குரிய மடி துணியை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். மேல் அதிக விவரம் வேண்டுவோர்: 6742 7829 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் பேசவும்.
முகவரி:
Singapore Jain Religious Society
18 Jalan Yasin, Singapore 417991
Nearest MRT: Eunos (only 10 minutes walk from MRT).
Thursday, October 8, 2009
தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்
தசலாக்ஷனிக நோன்பு என்பது ஜைனர்களின் நோன்புகளில்(விரதங்களில்) முக்கியமானது ஆகும். தசம் என்றால் பத்து. லக்ஷணம் என்றால் குணம் என்று பொருள்.
பத்து குணங்களோடு தொடர்புடைய விழா என்று பொருள். இந்த விரதத்தை புரட்டாசி திங்கள் வளர்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி திதி) தொடங்கி 14 -காம் நாள் வரை (சதுர்த்தசி) வரை அனுஷ்டிப்பார்கள். விரதத்தின் முடிவில், கோயிலில் விசேஷ பூஜை செய்து நிறைவு செய்வார்கள். ஜைனர்கள் இந்நாட்களில் புலனடக்கதுடன் இருந்து ஜின பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதல்யவைகளை செய்து, ஒருவேளை மட்டும் உண்டு, காலை மாலை வேளைகளில் ஆகமங்கள் கேட்டல், படித்தல், மற்றும் தத்துவ விசாரங்களில் ஈடுபடுவர்.
இது நிலையான விழாக்களின் வகையை சார்ந்தது. அது என்ன நிலையான விழா? நிலையான விழாக்கள் யாருடனும் தொடர்புபடுத்த படுவதில்லை (எ.கா. மகாவீர் ஜெயந்தி மற்றும் தீபாவளி பகவன் வர்த்தமான மகாவீரருடன் தொடர்பு கொண்டுள்ளது, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ராம நவமி போன்றவை அந்த மகாபுருஷர்களின் தொடர்பு உள்ளது)
இந்த விழாவில் உணவு மற்றும் விளையாட்டு வகையறாக்களுக்கு இடமில்லை. சரி அந்த பத்து குணங்கள்தான் என்ன என்று கேட்கிறீர்கள் அல்லவா? அவை:
புத்தகத்தின் பெயர்: தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்
ஹிந்தி மூலம் : டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர்
தமிழாக்கம்: பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி
பக்கங்கள் : 256
1981 ல் பிரசுரிக்கப்பட்டது
ஸ்ரீ குந்த குந்த கஹான் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,
ஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,
15, சந்திரப்ப முதலி தெரு, சென்னை -600001

- உத்தம க்ஷமா (பொறையுடைமை),
- உத்தம மார்தவம் (மென்மை)
- உத்தம ஆர்ஜவம் (செம்மை)
- உத்தம சத்யா (மெய்ம்மை)
- உத்தம சௌசம் (நன்மை)
- உத்தம ஸம்யமம் (அடக்கம்)
- உத்தம தவம் (தவம்)
- உத்தம த்யாகம் (துறத்தல்)
- உத்தம ஆகிஞ்சன்யம் (ஒன்றின்மை)
- உத்தம பிரம்மச்சர்யம் (திறம்பாமை)
புத்தகத்தின் பெயர்: தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்
ஹிந்தி மூலம் : டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர்
தமிழாக்கம்: பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி
பக்கங்கள் : 256
1981 ல் பிரசுரிக்கப்பட்டது
ஸ்ரீ குந்த குந்த கஹான் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,
ஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,
15, சந்திரப்ப முதலி தெரு, சென்னை -600001
Tuesday, September 29, 2009
ஜைன தர்மம் - மின் புத்தகம்
25 ஆண்டுகட்கு முன்பு சென்னையில் என் தந்தை "ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?" என்ற புத்தகத்தை குறளகத்தில் வாங்கினார். மிக எளிமையான, ஆனால் மிக ஆழமான அறிமுகம் தரும் அற்புத புத்தகத்தை என் தந்தையின் நண்பர் வாங்கி, மீண்டும் தர மறந்து, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமீபத்தில் எங்களுக்கு திரும்ப தந்தார் ( நல்ல மனிதர்). நைந்த நிலையில் இருந்த அந்த புத்தகத்தை இங்கு Scan செய்து pdf வடிவத்தில் இங்கு தந்துள்ளேன். புத்தக தலைப்பை சொடுக்கினால், அது Scribd க்கு அழைத்து சென்று புத்தகத்தை காட்டும். விரும்பினால் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: புத்தகத்தின் பக்கங்கள் 1 முதல் 5 வரை, மற்றும் 7,8 பக்கங்கள் கிடைக்கவில்லை. ஸ்கேன் செய்யபட்ட தரமும் சுமாராகத்தான் இருக்கும்.
புத்தக விவரம்:
ஹிந்தி மூலம் : जैन धर्मं क्या कहता है?
தமிழ் வடிவம்: ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?
ஆசிரியர்: திரு. ஸ்ரீ கிருஷ்ணதத்த பட்
வெளியீடு: சர்வோதய பிரசுராலயம், தஞ்சாவூர்
ஆண்டு: 1966

Monday, September 21, 2009
சமண தடயம்
சமீபத்தில் "சமண தடயம்" என்ற நூலை வாசித்தேன். மிக அருமையான தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் "திருமலை" என்னும் தொன்மையான ஜைன ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் விழா கருத்தரங்கின் படைப்புகள் அடங்கிய தொகுப்பு. தொல்லியல் ஆய்வர்கள் திரு. நடன காசிநாதன் மற்றும் மா. சந்திரமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். மணிவாசகர் நிலைய வெளியீடு.
Subscribe to:
Comments (Atom)