Thursday, December 10, 2009

பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு-அ. லெ. நடராஜன்

அ. லெ. நடராஜன் அவர்கள் எழுதிய "பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு" என்ற புத்தகத்தை அம்ருதா பதிப்பகம் மறு பதிப்பு செய்துள்ளது. அற்புத நூல்.




சிங்கப்பூர் நூலகங்களில்  இரவலுக்கு கிடைக்கிறது.இந்தியாவில் உள்ளவர்கள் 230 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூலை,     ரூ. 150  க்கு கீழ்கண்ட முகவரியில் வாங்கி கொள்ளலாம்.

அம்ருதா பதிப்பகம்,
எண்-5 , 5 வது தெரு, எஸ். எஸ். அவின்யு , சக்தி நகர்,
போரூர், சென்னை -106
மின்னஞ்சல்: amrudhapathippagam@yaoo.co.in
தொலைபேசி: 91-44-22522277

Sunday, November 1, 2009

Lord Mahavira -A study in Historical perspective

Dear readers,
I had  an opportunity to go through a book in English named "Lord Mahavira (A study in Historical perspective)". I have uploaded the book in scribd. If you have interest, Please click on the title.

Title of the book: Lord Mahavira - A study in Historical perspective
Author: Dr. Boolchand
First published in 1948 and Republished in 1987
Published by: P.V.Research institute, Varanasi.

ஜைனம் - எளிய விளக்கம்

ஜைனம் - எளிய விளக்கம்
ஜைன இளைஞர் மன்றத்தின்( சென்னை), ஜைனம் பற்றி மிக எளிமையான குறிப்பு ஒன்றை ஜைன உலக இணையத்தில் கண்டேன். அதை pdf ல் scribd ல் வலைஏற்றிஉள்ளேன். கீழ்கண்ட தலைப்பை சொடுக்கவும்.

தலைப்பு: ஜைனம் அறிமுகம்  - ஜைன இளைஞர் மன்றம், சென்னை.

Tuesday, October 20, 2009

தீபாவளி வாழ்த்தும், பகவான் மகாவீரரின் திருவுருவ தரிசனமும்

அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூர் ஜைன சங்கத்தில்-(ஸ்தானக்) (இரண்டாம் தளம்) மிக அழகிய மகாவீரரின் சிலையை ஸ்தாபிதம் செய்திருக்கிறார்கள். ஞாயிறு  அன்று காலை பகவனை தரிசிக்கும் பேறையும், பூஜையை தரிசிக்கும் பேறையும் பெற்றோம். படங்கள் கீழே...


பகவானின் தரிசனம் காலை 7:30 முதல் 10:00 மணி வரை மட்டும் என அலுவலகத்தில் தெரிவித்தார்கள்.பூஜை செய்ய விரும்புபவர்கள், பூஜைக்குரிய மடி துணியை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். மேல் அதிக விவரம் வேண்டுவோர்: 6742 7829 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் பேசவும்.  
முகவரி:
Singapore Jain Religious Society

18 Jalan Yasin, Singapore 417991
Nearest MRT: Eunos (only 10 minutes walk from MRT).


Thursday, October 8, 2009

தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்

தசலாக்ஷனிக நோன்பு என்பது ஜைனர்களின் நோன்புகளில்(விரதங்களில்)  முக்கியமானது ஆகும். தசம் என்றால் பத்து. லக்ஷணம் என்றால் குணம் என்று பொருள்.
பத்து குணங்களோடு தொடர்புடைய விழா என்று பொருள். இந்த விரதத்தை புரட்டாசி திங்கள் வளர்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி திதி) தொடங்கி  14 -காம் நாள் வரை (சதுர்த்தசி) வரை அனுஷ்டிப்பார்கள். விரதத்தின் முடிவில், கோயிலில் விசேஷ  பூஜை செய்து நிறைவு செய்வார்கள். ஜைனர்கள் இந்நாட்களில் புலனடக்கதுடன் இருந்து ஜின பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதல்யவைகளை செய்து, ஒருவேளை மட்டும் உண்டு, காலை மாலை வேளைகளில் ஆகமங்கள் கேட்டல், படித்தல், மற்றும் தத்துவ விசாரங்களில் ஈடுபடுவர்.

இது  நிலையான விழாக்களின் வகையை சார்ந்தது. அது என்ன நிலையான விழா? நிலையான விழாக்கள் யாருடனும் தொடர்புபடுத்த படுவதில்லை (எ.கா. மகாவீர் ஜெயந்தி மற்றும் தீபாவளி பகவன் வர்த்தமான மகாவீரருடன் தொடர்பு கொண்டுள்ளது, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ராம நவமி போன்றவை  அந்த மகாபுருஷர்களின் தொடர்பு உள்ளது)

இந்த விழாவில் உணவு மற்றும் விளையாட்டு வகையறாக்களுக்கு இடமில்லை. சரி அந்த பத்து குணங்கள்தான் என்ன என்று கேட்கிறீர்கள் அல்லவா? அவை:
  1.  உத்தம க்ஷமா (பொறையுடைமை),
  2. உத்தம மார்தவம் (மென்மை)
  3. உத்தம ஆர்ஜவம் (செம்மை)
  4. உத்தம சத்யா (மெய்ம்மை)
  5. உத்தம சௌசம் (நன்மை)
  6. உத்தம ஸம்யமம் (அடக்கம்)
  7. உத்தம தவம் (தவம்)
  8. உத்தம த்யாகம் (துறத்தல்)
  9. உத்தம ஆகிஞ்சன்யம் (ஒன்றின்மை)
  10. உத்தம பிரம்மச்சர்யம் (திறம்பாமை)
இந்த பத்து குணங்கள் பற்றி விரிவாகவும், ஏன் இதை இந்நாட்களில் கடைபிடிக்க வேண்டும் , எவ்வாறு இவை ஆன்ம நலனுக்கு பலனளிக்கும் என்பதை விரிவாக,  சுவையாக விளக்கி உள்ளார்  டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர் . அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி. விவரம்:

புத்தகத்தின் பெயர்: தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்
ஹிந்தி மூலம் : டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர்
தமிழாக்கம்: பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி
பக்கங்கள் : 256
1981 ல் பிரசுரிக்கப்பட்டது

ஸ்ரீ குந்த குந்த கஹான் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,
ஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,
15, சந்திரப்ப முதலி தெரு, சென்னை -600001



Tuesday, September 29, 2009

ஜைன தர்மம் - மின் புத்தகம்

25 ஆண்டுகட்கு முன்பு சென்னையில் என் தந்தை "ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?" என்ற புத்தகத்தை குறளகத்தில் வாங்கினார். மிக எளிமையான, ஆனால் மிக ஆழமான அறிமுகம் தரும் அற்புத புத்தகத்தை என் தந்தையின் நண்பர் வாங்கி, மீண்டும் தர மறந்து, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமீபத்தில் எங்களுக்கு திரும்ப தந்தார் ( நல்ல மனிதர்). நைந்த நிலையில் இருந்த அந்த புத்தகத்தை இங்கு Scan செய்து pdf வடிவத்தில் இங்கு தந்துள்ளேன். புத்தக தலைப்பை சொடுக்கினால், அது Scribd க்கு அழைத்து சென்று புத்தகத்தை காட்டும். விரும்பினால் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: புத்தகத்தின் பக்கங்கள் 1 முதல் 5 வரை, மற்றும் 7,8 பக்கங்கள் கிடைக்கவில்லை. ஸ்கேன் செய்யபட்ட தரமும் சுமாராகத்தான் இருக்கும்.

புத்தக விவரம்:
ஹிந்தி மூலம் : जैन धर्मं क्या कहता है?
தமிழ் வடிவம்: ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?
ஆசிரியர்: திரு. ஸ்ரீ கிருஷ்ணதத்த பட்
வெளியீடு: சர்வோதய பிரசுராலயம், தஞ்சாவூர்
ஆண்டு: 1966

Monday, September 21, 2009

சமண தடயம்


சமீபத்தில் "சமண தடயம்" என்ற நூலை வாசித்தேன். மிக அருமையான தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் "திருமலை" என்னும் தொன்மையான ஜைன ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் விழா கருத்தரங்கின் படைப்புகள் அடங்கிய தொகுப்பு. தொல்லியல் ஆய்வர்கள் திரு. நடன காசிநாதன் மற்றும் மா. சந்திரமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். மணிவாசகர் நிலைய வெளியீடு.

Monday, April 27, 2009

ரிஷப தீர்த்தங்கரர் வரலாறு

அறிமுகம்:
ஜைன மதத்தின் வரலாறு ஸ்ரீ ரிஷப தீர்த்தங்கரருடன் தொடங்குகிறது. இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னால், அதாவது கி.மு 3000 க்கு சற்று முன்பு, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாதர் எனப்படுகிற ரிஷப தீர்த்தங்கரர் இருந்ததற்கானஆதாரங்கள் காண கிடைக்கின்றன. தீர்த்தங்கரர்கள் வரிசையில் முதல் தீர்த்தங்கரர் இவரே. எனவே,ஆதாரங்கள் உள்ள ரிஷப தீர்த்தங்கரர் பற்றி இங்கு காண்போம்.

<தீர்த்தங்கரர்என்றால்
...

தீர்த்தங்கரர் என்றால் பிறவி எனும் கடலில் (தீர்த்தம்) இருந்து கரை சேர வழிகாட்டுபவர் என்று பொருள்.

ஸ்ரீ ரிஷபரின் முற்பிறவிகள்

ரிஷபராக பிறபதற்கு முன்னாள் இவர் பல்வேறு பிறவி எடுத்ததாகவும்,


ஸ்ரீ ரிஷபரின் பிறப்பும் வாழ்வும்.
நாபி ராஜனுக்கும், மருதேவி அரசிக்கும் இக்ஷவாகு வம்சத்தில் பிறந்தவர் ரிஷபர் . இவருடைய மனைவியர் பெயர்கள் சுமங்களா மற்றும் சுனந்தா. இவர்களுக்கு பரதன் மற்றும் பாகுபலி என்ற மகன்கள் பிறந்தனர். [பரதன் பெயராலேயே இந்தியாவிற்கு "பாரதம்" என்ற பெயர் வந்ததாக ஜைனர்கள் நம்புகின்றனர்.. இளைய மகன் பாகுபலி துறவியானார். இவரது சிலையையே புகழ்பெற்ற "ச்ரவனபெலகோலா"வில் காண்கிறோம். இவரை போற்றி நாடெங்கிலும்பல்வேறுசிலைகள்எழுப்பபெற்றன]


ஜைன வேத நூல்கள் ரிஷபரே எல்லாவற்றுக்கும் மூல காரணம் என்கிறது. இளவரசராக இருக்கும்போதே அவர் முதன் முதலில் மக்களுக்கு எழுத்து, எண்கள், மொழி ஆகியவற்றை கற்பித்தவர் எனவும் முதலில் உழவு தொழிலை, நாகரிகத்தை ஏற்படுத்தியவர் என்றும், சமூக சட்டங்கள், கலைகள், நிர்வாகம், கட்டடகலை, போன்ற பல "முதல்"கட்கு இவரே காரணம் என்று கூறுகிறது.

நாபிராஜன், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷபருக்கு முடி சூட்ட முடிவு செய்தார். ரிஷபரே அவசர்பினி காலத்தின் முதல் அரசராக ஜைனர்களால் கருதப்படுகிறார். இந்த யுகத்தின் முதல் அரசர். முடிசூட்டு விழாவின்போது தேவர்கள் எல்லா புனித நதிகளில் இருந்தும் நீர் கொண்டு வந்து நீராட்டினார்கள் என்று ஜைன நூல்கள் கூறுகின்றன.

இந்திரன், எல்லா வளங்களும் உடைய மிகச்சிறந்த நகரை நிர்மாணிக்குமாறு குபேரனுக்கு ஆணையிட்டான். அதன் பேரில் குபேரன் வினிதா என்ற அழகிய நகரை ஸ்ரீ ரிஷபருக்காக கட்டினான். அந்நகரமே புகழ் பெற்ற அயோத்தி நகரமாகும்.


(தொடரும்)



Monday, April 6, 2009

புத்தகம் அறிமுகம் 2 - "ஜைன மதம் "

ஜைன மதம் பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமா? நான் பரிந்துரை செய்யும் நூல் "ஜைன மதம்". விலை குறைவு ஆனால் தரம் மிக்க நூல். எழுதியவர் பா.ராகவன். ஜைன மதம் என்று தலைப்பிட்டு இருந்தாலும் மஹாவீரரின் வாழ்க்கை வரலாற்றைதான் எழுதி உள்ளார். என்றாலும் குழந்தைகட்கு பயனுடையதாக இருக்கும். பா. ராகவன் அவர்களின் நடை மிக அருமை. புத்தகத்தை எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடுவீர்கள். புகழ் பெற்ற "கிழக்கு" பதிப்பகத்தின் நிறுவனமான "prodigy"பதிப்பித்துள்ளது.

ஜைன ஆலயங்களில் வழிபாட்டு முறை, ஜைனர்களின் நோன்பும், அதன் முறைகளும், விரதத்தின் காரணம் போன்றவற்றை மிக எளிமையாக ஆனால் குழந்தைகள் மனதில் பதியும்படி எழுதி உள்ளார். மேலும் ஜைன மதம் ஒரு நாத்திக மதம் அல்ல என்பதை எளிமையாக விளக்கி உள்ளார்.

நூல் விவரம்:
புத்தகத்தின் பெயர்: ஜைன மதம்
ஆசிரியர்: பா. ராகவன்
வெளியீடு: "Prodigy", New Horizon Media pvt Ltd
33/15, Eldams Road, Alwarpet, Chennai -18
Ph: 044-42009601/03/04 Email: support@nhm.in website: www.nhm.in
விலை: ரூ. 25 பக்கங்கள்: 78





குறிப்பு: சிங்கபூரில் உள்ள நிறைய கிளை நூலகங்களிலும் மற்றும் தேசிய நூலக வாரியத்தில் இரவலுக்கு கிடைக்கிறது.

மஹாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

7 ஏப்ரல் 2009

Monday, March 30, 2009

மகாவீரர் பற்றிய புத்தகம்..

தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருவாளர்கள் பானுகுமார், அஜித்தாஸ் மற்றும் மஞ்சுநாத் அவர்களுக்கு நன்றி.

நான் சமீபத்தில் திரு ஜெகாதா அவர்கள் எழுதிய "மகாவீரர் - வாழ்வும் தொண்டும்" என்ற நூலை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் எடுத்து படித்தேன். வர்தமானரின் இளமை முதல் முக்தி வரை சுருக்கமாக ஆனால் முடிந்த வரை எல்லா செய்திகளையும் உள்ளடக்கி எழுதி உள்ளார். பா ஹு லனுக்கு உபதேசம், மகாவீரரின் வாழ்க்கையில் கோசாலனின் பங்கு, ஹடயோகமும் பகைமையும், சோமலசாரியன் செய்த யாகம், பிம்பிசாரனின் வாழ்வில் மகாவீரர், ஜைன பௌத்த உறவு போன்ற பகுதிகளை சுருக்கமாக ஆனால் புரியும்படி ஆசிரியர் விளக்கி உள்ளார்.

மகாவீரரின் போதனை முத்துக்களை தருவது ஆச்சர்யம் அல்ல. ஆனால் தமிழக ஜைனர்கள் இன்றும் அன்றாடம் தீர்தங்கரர்களை வழிபடும் ஜெயமாலை ஸ்துதி, சிறிய, பெரிய புஷ்பாஞ்சலி ஸ்தோத்திரம், ஜலாதி அஷ்டகம், மஹாவீராஷ்டகம் , மகாவீரரின் சாசன யக்ஷன் மாதங்க யக்ஷன், சாசன யக்ஷி சித்தாயிகா பற்றியும், பிரதிஷ்டா சார சங்க்ரகம் ஆகிய சமஸ்க்ருத -தமிழ் ஸ்தோத்திரங்களை இணைத்திருப்பது ஆச்சர்யமே.

புத்தக விவரம்:
நூலின் பெயர்: மகாவீரர் - வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - திரு ஜெகாதா
வெளியீடு:
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பழைய எண் 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை -600017 Tel: 24331510 Email: shreeshenbaga@ yahoo.com
விலை: ரூ 45.00



Tuesday, March 17, 2009

திரு வெங்கட் சாமிநாதனின் சிறந்த கட்டுரைகள்..

தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், விமர்சன பிதாமகருமான திரு வெங்கட் சாமிநாதனை எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அவரின் நியாயமான, நேர்மையான விமர்சனங்கள் மிகவும் ஆச்சர்யதிற்குரியவை.
அவரின் "இந்திய இலக்கியம் - வாழ்க்கை கூறுகளும் பண்புகளும்" என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். இவற்றை படிக்கும்போது, சமஸ்கிருதத்தையும், ப்ராக்ருததையும், ஹிந்தியையும் படிக்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். படித்திருந்தால் மேலும் தமிழுக்கு சேவை(?)செய்திருக்கலாம்.

Monday, March 16, 2009

தமிழ் சமணம் Blog பற்றி...

என் அறிவுக்கு எட்டிய வரை, ஜைன மதத்தை பற்றி தமிழில் "Blog" ஆரம்பித்த முதல் ஜைனர் திரு பானுகுமார் அவர்கள்தான். அவரின் அடியொற்றிதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன். அவரை போல் தரமான எழுத்தை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அவரின் "தமிழ் சமணம்" உங்களுக்கு பயனளிக்க கூடும்.

ஜெயமோகனின் விமர்சன பார்வையில் ஜைனம்

எழுத்தாளர் திரு ஜெயமோகன் ஜைனத்தை பற்றி "நீதியும் நாட்டார் விவேகமும்" என்ற கட்டுரையில் எழுதுள்ளர். நன்றி: திண்ணை இணைய தளம்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் - சிந்தாமணி பற்றி..

ஜெயமோகன் பற்றி அறிந்திராத தமிழ் வாசகர்கள் குறைவு. தமிழ் நாட்டின் நிகழ்கால எழுத்தாளர்களில் சிந்திக்க வைக்கும் எழுத்தாளர். அவரின் "விஷ்ணுபுரம்" என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். நீங்கள் சுலபமாக (?) அறிந்துகொள்ள வேண்டும் என்றால் "நான் கடவுள்" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். அவரின்
சீவக சிந்தாமணி பற்றிய கட்டுரை.

Friday, February 13, 2009

தமிழ் ஜிந வாணி

வணக்கம். இந்த வலையின் நோக்கம் தமிழில் வெளியாகும், வெளியான மற்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ஜைன நூல்களின் தொகுப்பை வெளியிடுவது ஆகும். ஜைன அன்பர்களுக்கு மட்டுமல்ல இந்த வலை தளம். அனைவருக்குமானது. இது மத அடிப்படையில் ஒருவரை ஒருவர் சாடுவதர்க்கான தளமல்ல. எல்லா மத தர்மங்களையும் மதிப்பவர்களுக்கான தளம்.

தமிழ் ஜைன நூல்களுக்கென ஒரு தளத்தை உருவாக்கி எல்லோருக்கும் பயன்படும்படி செய்வதே இதன் நோக்கம். ஜைன தர்மத்தை பற்றி கட்டுரையோ கவிதையோ எழுதலாம். ஆனால் மற்ற மதத்தை இழிவு படுத்துவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ இதை பயன்படுத்தாதீர்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் "நாம் யார்? நாம் பிறந்ததன் நோக்கம் என்ன?, மரணத்தின் பின்ன்னர் நிகழ்வது என்ன? மறு பிறவி உண்டா?கர்ம வினைகள் என்று ஒன்று உண்டா? கடவுள் என்றால் யார்? " போன்ற கேள்விகள் எழுவது இயற்கை. அந்த கேள்விகளுக்கான விடை தேடும் பயணமே மதம். ஒவ்வொன்றும் ஒரு பாதையில் பயணித்தாலும் - நோக்கம் ஒன்றே. சில இடங்களில் பாதை ஒரே இடத்தில், திசையில் சந்திக்கும். சில இடங்களில் முற்றிலும் வேறு பட்ட திசையில் செல்லும். எல்லா இந்திய மதங்களுக்குள்ளும் இழைந்தோடும் ஒரே தத்துவம்-கர்ம வினை பயன்கள் என்பதுதான். எனவே ஜைனர் அல்லாதவர்க்கும் ஆராய்ச்சிக்கோ அல்லது ஆர்வத்திற்கோ இந்த வலை தளம் பயன்படக்கூடும்.

இந்த தளத்தில் ஜைன புத்தகத்தை/ கட்டுரையை/ internet link ஐ வலையேற்ற விரும்புவர்கள் d.varthamanan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

நன்றி

அன்புடன்
த.வர்த்தமானன்.