Friday, February 13, 2009

தமிழ் ஜிந வாணி

வணக்கம். இந்த வலையின் நோக்கம் தமிழில் வெளியாகும், வெளியான மற்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ஜைன நூல்களின் தொகுப்பை வெளியிடுவது ஆகும். ஜைன அன்பர்களுக்கு மட்டுமல்ல இந்த வலை தளம். அனைவருக்குமானது. இது மத அடிப்படையில் ஒருவரை ஒருவர் சாடுவதர்க்கான தளமல்ல. எல்லா மத தர்மங்களையும் மதிப்பவர்களுக்கான தளம்.

தமிழ் ஜைன நூல்களுக்கென ஒரு தளத்தை உருவாக்கி எல்லோருக்கும் பயன்படும்படி செய்வதே இதன் நோக்கம். ஜைன தர்மத்தை பற்றி கட்டுரையோ கவிதையோ எழுதலாம். ஆனால் மற்ற மதத்தை இழிவு படுத்துவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ இதை பயன்படுத்தாதீர்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் "நாம் யார்? நாம் பிறந்ததன் நோக்கம் என்ன?, மரணத்தின் பின்ன்னர் நிகழ்வது என்ன? மறு பிறவி உண்டா?கர்ம வினைகள் என்று ஒன்று உண்டா? கடவுள் என்றால் யார்? " போன்ற கேள்விகள் எழுவது இயற்கை. அந்த கேள்விகளுக்கான விடை தேடும் பயணமே மதம். ஒவ்வொன்றும் ஒரு பாதையில் பயணித்தாலும் - நோக்கம் ஒன்றே. சில இடங்களில் பாதை ஒரே இடத்தில், திசையில் சந்திக்கும். சில இடங்களில் முற்றிலும் வேறு பட்ட திசையில் செல்லும். எல்லா இந்திய மதங்களுக்குள்ளும் இழைந்தோடும் ஒரே தத்துவம்-கர்ம வினை பயன்கள் என்பதுதான். எனவே ஜைனர் அல்லாதவர்க்கும் ஆராய்ச்சிக்கோ அல்லது ஆர்வத்திற்கோ இந்த வலை தளம் பயன்படக்கூடும்.

இந்த தளத்தில் ஜைன புத்தகத்தை/ கட்டுரையை/ internet link ஐ வலையேற்ற விரும்புவர்கள் d.varthamanan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

நன்றி

அன்புடன்
த.வர்த்தமானன்.