நான் சமீபத்தில் திரு ஜெகாதா அவர்கள் எழுதிய "மகாவீரர் - வாழ்வும் தொண்டும்" என்ற நூலை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் எடுத்து படித்தேன். வர்தமானரின் இளமை முதல் முக்தி வரை சுருக்கமாக ஆனால் முடிந்த வரை எல்லா செய்திகளையும் உள்ளடக்கி எழுதி உள்ளார். பா ஹு லனுக்கு உபதேசம், மகாவீரரின் வாழ்க்கையில் கோசாலனின் பங்கு, ஹடயோகமும் பகைமையும், சோமலசாரியன் செய்த யாகம், பிம்பிசாரனின் வாழ்வில் மகாவீரர், ஜைன பௌத்த உறவு போன்ற பகுதிகளை சுருக்கமாக ஆனால் புரியும்படி ஆசிரியர் விளக்கி உள்ளார்.
மகாவீரரின் போதனை முத்துக்களை தருவது ஆச்சர்யம் அல்ல. ஆனால் தமிழக ஜைனர்கள் இன்றும் அன்றாடம் தீர்தங்கரர்களை வழிபடும் ஜெயமாலை ஸ்துதி, சிறிய, பெரிய புஷ்பாஞ்சலி ஸ்தோத்திரம், ஜலாதி அஷ்டகம், மஹாவீராஷ்டகம் , மகாவீரரின் சாசன யக்ஷன் மாதங்க யக்ஷன், சாசன யக்ஷி சித்தாயிகா பற்றியும், பிரதிஷ்டா சார சங்க்ரகம் ஆகிய சமஸ்க்ருத -தமிழ் ஸ்தோத்திரங்களை இணைத்திருப்பது ஆச்சர்யமே.
புத்தக விவரம்:
நூலின் பெயர்: மகாவீரர் - வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - திரு ஜெகாதா
வெளியீடு:
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பழைய எண் 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை -600017 Tel: 24331510 Email: shreeshenbaga@ yahoo.com
விலை: ரூ 45.00
