அறிமுகம்:
ஜைன மதத்தின் வரலாறு ஸ்ரீ ரிஷப தீர்த்தங்கரருடன் தொடங்குகிறது. இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னால், அதாவது கி.மு 3000 க்கு சற்று முன்பு, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாதர் எனப்படுகிற ரிஷப தீர்த்தங்கரர் இருந்ததற்கானஆதாரங்கள் காண கிடைக்கின்றன. தீர்த்தங்கரர்கள் வரிசையில் முதல் தீர்த்தங்கரர் இவரே. எனவே,ஆதாரங்கள் உள்ள ரிஷப தீர்த்தங்கரர் பற்றி இங்கு காண்போம்.
<தீர்த்தங்கரர்என்றால்...
தீர்த்தங்கரர் என்றால் பிறவி எனும் கடலில் (தீர்த்தம்) இருந்து கரை சேர வழிகாட்டுபவர் என்று பொருள்.
ஸ்ரீ ரிஷபரின் முற்பிறவிகள்
ரிஷபராக பிறபதற்கு முன்னாள் இவர் பல்வேறு பிறவி எடுத்ததாகவும்,
ஸ்ரீ ரிஷபரின் பிறப்பும் வாழ்வும்.
நாபி ராஜனுக்கும், மருதேவி அரசிக்கும் இக்ஷவாகு வம்சத்தில் பிறந்தவர் ரிஷபர் . இவருடைய மனைவியர் பெயர்கள் சுமங்களா மற்றும் சுனந்தா. இவர்களுக்கு பரதன் மற்றும் பாகுபலி என்ற மகன்கள் பிறந்தனர். [பரதன் பெயராலேயே இந்தியாவிற்கு "பாரதம்" என்ற பெயர் வந்ததாக ஜைனர்கள் நம்புகின்றனர்.. இளைய மகன் பாகுபலி துறவியானார். இவரது சிலையையே புகழ்பெற்ற "ச்ரவனபெலகோலா"வில் காண்கிறோம். இவரை போற்றி நாடெங்கிலும்பல்வேறுசிலைகள்எழுப்பபெற்றன]
ஜைன வேத நூல்கள் ரிஷபரே எல்லாவற்றுக்கும் மூல காரணம் என்கிறது. இளவரசராக இருக்கும்போதே அவர் முதன் முதலில் மக்களுக்கு எழுத்து, எண்கள், மொழி ஆகியவற்றை கற்பித்தவர் எனவும் முதலில் உழவு தொழிலை, நாகரிகத்தை ஏற்படுத்தியவர் என்றும், சமூக சட்டங்கள், கலைகள், நிர்வாகம், கட்டடகலை, போன்ற பல "முதல்"கட்கு இவரே காரணம் என்று கூறுகிறது.
நாபிராஜன், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷபருக்கு முடி சூட்ட முடிவு செய்தார். ரிஷபரே அவசர்பினி காலத்தின் முதல் அரசராக ஜைனர்களால் கருதப்படுகிறார். இந்த யுகத்தின் முதல் அரசர். முடிசூட்டு விழாவின்போது தேவர்கள் எல்லா புனித நதிகளில் இருந்தும் நீர் கொண்டு வந்து நீராட்டினார்கள் என்று ஜைன நூல்கள் கூறுகின்றன.
இந்திரன், எல்லா வளங்களும் உடைய மிகச்சிறந்த நகரை நிர்மாணிக்குமாறு குபேரனுக்கு ஆணையிட்டான். அதன் பேரில் குபேரன் வினிதா என்ற அழகிய நகரை ஸ்ரீ ரிஷபருக்காக கட்டினான். அந்நகரமே புகழ் பெற்ற அயோத்தி நகரமாகும்.
(தொடரும்)
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment